கோவளத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம் துவக்கம் அமைச்சர் பங்கேற்பு
கோவளத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம் துவக்கம், அமைச்சர் தா மோ அன்பரசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்...
கோவளத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம் துவக்கம் அமைச்சர் தா மோ அன்பரசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்... செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலை கோவளம் ஊராட்சியில் நீலக்கடற்கரை, மாதா கோவில், கைலாசநாதர் கோவில், தர்கா, விடுதிகள் , அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள், உள்ளிட்டவை உள்ளன. மேலும், கோவளம் அருகே முட்டுக்காடு படகு குழாம், திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் கோவில் உள்ளன இதன் காரணமாக, அனைத்து தரப்பு மக்களும், சுற்றுலா பயணியரும் தினமும் கோவளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர் அவசர தேவையின்போது, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கேன சிறுசேரி, திருப்போரூர், மாமல்லபுரத்திலிருந்து வாகனம் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் வர வேண்டியுள்ளது இதற்கு தீர்வு காண கோவளத்தில், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், என கோரிக்கை எழுந்தது இந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார் இதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கோவளத்தில் கடலோர காவல் நிலையம் அருகே இடம் தேர்வு செய்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் அமைக்க நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய கட்டிடம் கட்ட கருத்துரை அனுப்பப்பட்டுள்ளது இந்நிலையில், அவசரம் கருதி உடனடியாக தீயணைப்பு நிலையம் தற்காலிக கட்டிடத்தில் இயக்க அரசு முடிவு செய்தது இதனையடுத்து, கோவளம் நூலக வளாகத்தில் தற்காலிக கட்டிடத்தில் தீயணைப்பு நிலையம் துவக்க விழா நடந்தது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் லட்சுமி நாராயணன், சப் கலெக்டர் நாராயணசர்மா, திருப்போரூர் சேர்மேன் இதயவர்மன் ஊராட்சி தலைவர் சோபனா உள்ளிட்டோருடன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.