குமரி மாவட்டம் வெள்ளிசந்தை அடுத்த மேல முட்டம் பகுதியை சேர்ந்தவர் சிலுவை இருதயம் மகன் சகாய சிஜின் (21). கடல் தொழில் செய்து வருகிறார். முட்டம் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் மகன் சுஜன் (21) இவர்கள் இருவரும் சம்பவத்தன்று பைக்கில் ஒரு திருமண வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். சுஜன் பைக்கை ஓட்டி வந்தார். அப்போது முட்டம் பகுதி சேர்ந்த பெர்க்மான்ஸ் (53) என்பவர் ஓட்டி வந்த வாகனம் இவர்களது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரெண்டு பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சகாய சிஜின் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் பெர்க்மான்ஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.