பனப்பாக்கம் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு!

மாணவர்களுடன் அமர்ந்து பாடம் கவனித்த ஆட்சியர்!

Update: 2025-01-22 15:05 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று ஆய்வு செய்தார். அப்போது பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு கணித பாடம் நடத்தியதை ஆட்சியர் சந்திரகலா மாணவிகளுடன் அமர்ந்து கவனித்தார். மேலும் மாணவிகளுக்கு நன்கு புரியும்படி பாடம் எடுத்த ஆசிரியருக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்த ஆய்வின்போது அரசு நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் என பலர் உடன் இருந்தனர்.

Similar News