தீராத வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து வாலிபர் பலி

போலீசார் விசாரணை

Update: 2025-01-22 17:38 GMT
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் திருஞான வேல் (39) திருமணமாகாதவர். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக காண்பித்தும் சிகிச்சை பலனளிக்காமல் இருந்து வந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி அன்று வீட்டில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்தவர் தற்கொலைக்கு முயன்று வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். இது குறித்து அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்பு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து அவரது தந்தை குப்புசாமி கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News