விருத்தாசலம் அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இருவர் கைது
10 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
விருத்தாசலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விளாங்காட்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக சேலம் நோக்கி சென்ற மினி கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை இட்டபோது அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. உடன் அந்த லாரியில் வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்திய போது விளங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் பிரகாஷ் (வயது 35) என்பதும், திருச்சி காட்டூரை சேர்ந்த முகமது அலி மகன் முகமது ஹரிஷ் (32), என்பதும் தெரியவந்தது. இருவரையும் பிடித்த போலீசார் 10 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து மினி லாரியை பறிமுதல் செய்து விருத்தாசலம் காவல் நிலையம் கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து பிரகாஷ், முகமது ஹரிஷ் ஆகிய இருவரையும் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து கடலூர் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பிரகாஷ், முகமது ஹரிஷ் ஆகிய இருவரையும் கைது செய்து ரேஷன் அரிசி எங்கிருந்து வாங்கப்பட்டது? எங்கே கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.