சம்பா நெல் வரத்து அதிகரிப்பு
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு குவிந்தது
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அறுவடை காலங்களில் சுமார் ஒரு கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும். தற்போது சம்பா நெல் வரத்து தொடங்கியுள்ளது. தற்போது விருத்தாசலம் பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் முடிந்து அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதால், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நெல் வரத்து வர தொடங்கியுள்ளது. நேற்று மாலை வரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகள் கொள்முதல் செய்வதற்காக கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக நெல் மூட்டைகளும், மற்றும் இதர தானியங்களான மணிலா உளுந்து பச்சை பயிறு நாட்டு கம்பு சோளம் உள்ளிட்ட பல்வேறு தானிய மூட்டைகள் என மொத்தம் 7860 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. 75 கிலோ அளவுள்ள நெல் மூட்டைகளில் பிபிடி ரகம் அதிகபட்சமாக 1699 ரூபாய்க்கும், சி ஆர் 1009 என்ற ரகம் 1512 ரூபாய்க்கும் விற்பனையானது.