ராகுல் காந்தி எம்பி மீது வழக்கப்பதிவு

பாஜக அரசை கண்டித்து விருத்தாசலத்தில் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2025-01-22 17:39 GMT
அசாம் மாநிலத்தில் பான் பஜார் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் மீது வழக்குப்பதிவு செய்து, கருத்து சுதந்திரத்தை பறிக்கின்ற வகையில் தொடர்ந்து ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கின்ற பாரதிய ஜனதா அரசை கண்டித்து விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். நகர தலைவர்கள் ரஞ்சித் குமார், வேல்முருகன், வட்டாரத் தலைவர்கள் ராவணன், சாந்தகுமார், ராமச்சந்திரன், பரமசிவம், கலைச்செல்வன், முன்னாள் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, ராஜீவ் காந்தி, ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News