இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்
தூத்துக்குடி இனிகோ நகர் கடற் பகுதியில் இருந்து படகுமூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக 70 மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 70 லட்சம் மதிப்பிலான 3000ஆயிரம் கிலோ புளி, பட்டாசு மற்றும் மாத்திரைகள் பறிமுதல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை நடவடிக்கை
தூத்துக்குடி இனிகோ நகர் கடற் பகுதியில் இருந்து படகுமூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக 70 மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 70 லட்சம் மதிப்பிலான 3000ஆயிரம் கிலோ புளி, பட்டாசு மற்றும் மாத்திரைகள் பறிமுதல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை நடவடிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் அவ்வப்போது கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார், உளவுப்பிரிவு போலீசார் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவ்வப்போது கடத்தல்காரர்கள் பிடிபட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இனிகோநகர் அருகே காட்டுப்பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக சில மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் இனிகோநகர் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு சுமார் 70 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து போலீசார் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்து சோதனை செய்தனர். 70 லட்ச ரூபாய் மதிப்பிலான தலா 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ புளி மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.. மேலும் 10 மூட்டைகளில் பட்டாசு மற்றும் மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. .உடனடியாக போலீசார் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்தனர் தொடர்ந்து உரிய விசாரணைக்கு பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சுங்கத்துறையில் ஒப்படைத்தனர். மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்