மகளின் திருமண செலவிற்கு என்ன செய்ய விவசாயி கவலை

குத்தாலம் அருகே அடுத்த வாரம் பெண்ணின் திருமணம் வைத்துள்ள நிலையில் பருவம் தவறி பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலிலே சாய்ந்து தண்ணீரில் கிடந்து முளைக்க தொடங்கியதால் அறுவடை செய்ய முடியாத சூழல் உள்ளதாக விவசாயி கவலை

Update: 2025-01-22 16:45 GMT
:- மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பாத்தாளடி சாகுபடி செய்திருந்தனர். கதிர்முற்றி அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் கடந்த 18 ஆம் தேதி பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து தண்ணீரில் மிதக்கின்றன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட குத்தாலம் ஒன்றியம் கங்கனாதபுரம் ஊராட்சி 1000 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் இந்த கனமழையால் நெற்கதிர்கள் வயலின் சாய்ந்து தரையோடு தரையாக தண்ணீரில் கிடைக்கிறது. அப்பகுதியை சேர்ந்த விவசாயி மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான 9 ஏக்கரும் சாய்ந்து கிடப்பதால் விவசாயி கவலை அடைந்துள்ளார். மேலும் அடுத்த வாரம் தனது மகளுக்கு திருமணம் வைத்துள்ளதாகவும் அறுவடை செய்து வரும் பணத்தை வைத்து திருமண செலவு செய்யலாம் என்று இருந்த நிலையில் இந்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலின் சாய்ந்துள்ளதாகவும், தண்ணீர் வடியாததால் நெல்மணிகள் முளைக்க தொடங்கி உள்ளதாகவும், அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திருமணத்தை எப்படி நடத்தப்போவது எனவும், ஏற்கனவே வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் அடகு வைத்து விவசாயம் செய்து வந்ததாகவும், தற்போது என்ன செய்வதென்று செய்வதறியாமல் கலக்கத்தில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட வந்த எம்எல்ஏ நிவேதா முருகனிடம் கண்ணீர் மல்க கூறி உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News