பள்ளி செல்லா மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதற்கான கூட்டம்

மாவட்ட வருவாய் அலுவலர் ஆலோசனை

Update: 2025-01-22 17:42 GMT
பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதற்கான ஆய்வு கூட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோட்டாட்சியர் சையத் மெக்மூத் தலைமை தாங்கினார். தாசில்தார் உதயகுமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் வினோத்குமார் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பள்ளியில் இடை நின்ற 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய மாணவர்களை தொடர்ச்சியாக வரவழைத்து இந்த ஆண்டு நடைபெறக்கூடிய பொதுத்தேர்வு எழுத வழிவகை செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் உள்ள 15 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு வராத பள்ளி இடைநிற்பதற்கு வாய்ப்புள்ள மாணவர்கள் அனைவரையும் பள்ளிகள் அளவில் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். பள்ளிக்கு வராத மாணவர்களை வரவழைத்து பொதுத்தேர்வினை எழுதுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என ஆலோசனைகள் வழங்கினார். இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News