விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் நியாய விலை கடை ஊழியர் தர்ணா

வருவாய்த் துறையினர் விசாரணை

Update: 2025-01-22 17:40 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரம் சக்தி நகரை சேர்ந்தவர் நளமகராஜன். இவர் கடந்த 2009 ம் ஆண்டு திட்டக்குடி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அவருடன் மகளிர் நியாயவிலை கடையில் பணிபுரிந்த சாந்தி என்பவர் நல மகாராஜன் மீது சில புகாரை நிர்வாகத்துக்கு கூறியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் நளமகாராஜன் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சாந்தி என்பவர் 10 ம் வகுப்பு படிக்காமலையே படித்ததாக போலி ஆவணம் பெற்று வேலை வாங்கியதாக நளமகாராஜன் சில ஆவணங்களை பெற்றுள்ளதாகவும், அதன் அடிப்படையில் சாந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறி நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அவர் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார். சம்பவத்தால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Similar News