நெமிலி காவல் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு!
காவல்நிலையத்தில் மாவட்ட எஸ்பி மற்றும் ஆட்சியர் ஆய்வு!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெமிலி போலீஸ் ஸ்டேஷனில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா ஆகியோர் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர் சித்திக் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் உடன் இருந்தனர். அப்போது புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் வலியுறுத்தினார்.