மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு மாவு பூச்சி கட்டுப்படுத்த வேளாண்துறை சார்பில் மருந்து.

மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு மாவு பூச்சி கட்டுப்படுத்த வேளாண்துறை சார்பில் மருந்து வழங்கப்படும் என விவசாயிகளுக்கு அழைப்பு.

Update: 2025-01-22 15:40 GMT
பரமத்திவேலூர்,ஜன.22- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள்  தோட்டக்கலை துறை மூலம் மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மாவுப்பூச்சி  மற்றும் செம்பேன்  தாக்குதலை கட்டுப்படுத்த மருந்துகள் வழங்கப்பட உள்ளது .தேவைப்படும் விவசாயிகள்  ஆதார் நகல், சிட்டா, அடங்கல் , போட்டோ 1 ஆகிய ஆவணங்களுடன் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகுமாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு அந்தந்த பகுதி உதவி தோட்டக்கலை அலுவலர்களை  தொடர்பு கொள்ளவும்.

Similar News