ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் . சார்பில் ஜீவானந்தம் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

குமாரபாளையம் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் . சார்பில் ஜீவானந்தம் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.  

Update: 2025-01-22 13:33 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் ஜீவானந்தம் நினைவு நாள்  நகர தலைவர் நஞ்சப்பன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. ஜீவாவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி, ஜீவாவின் சாதனைகளை நினைவு கூர்ந்தனர். இதில் நகர செயலர் பாசுப்ரமணி, சி.பி.ஐ. நகர செயலர் கணேஷ்குமார், வடக்கு ஒன்றிய செயலர் அர்த்தநாரி, நிர்வாகிகள் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News