கரூரில் 9- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை கூட்டமைப்பினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது.
கரூரில் 9- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை கூட்டமைப்பினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது.;
கரூரில் 9- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை கூட்டமைப்பினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை கூட்டமைப்பின் சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கூட்டமைப்பின் கூட்டுத் தலைமை ஏற்ற மோகன்ராஜ், நாகமணிகண்டன், முருகேசன், மகேந்திரன், சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் அன்பழகன், அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் செல்வராணி உள்ளிட்ட கூட்டமைப்பைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கிடவும் "சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை" உடன் இயற்ற வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத்துறையில் பணிபுரியும் அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் , தனிஊதியம் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பங்களிபு தொகையை இரத்து செய்ய வேண்டும். 2003ம் ஆண்டு முதல் செலுத்திய பங்களிப்பு நிதியை பொது வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு கொண்டு சென்று மீள வழங்கிட வேண்டும். அரசுப் பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பை 25% ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். பொது மக்களுக்கான பணியை சிறப்பாக மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் துறை கூட்டமைப்பினரை காவல்துறையினர் கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.