கரூரில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள் கூட்டமைப்பினர் கைது.

கரூரில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள் கூட்டமைப்பினர் கைது.;

Update: 2026-02-10 08:14 GMT
கரூரில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள் கூட்டமைப்பினர் கைது. தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர்கள் உமா மகேஸ்வரி, சரவணன் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில துணை தலைவர் தனலட்சுமி, மாவட்ட செயலாளர் தேவிகா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு, கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதி படி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் 15,700 வழங்க வலியுறுத்தியும், சிபிஎஸ் பங்களிப்பை கொடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆட்சியர் அலுவலகம் முன்பு கரூர்-திண்டுக்கல் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Similar News