சாலை மறியலில் ஈடுபட்ட ஒய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள்.
மதுரையில் ஒய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் உள்ள மதுரை மண்டல போக்குவரத்து தலைமைக் கழக அலுவலகம் முன்பாக இன்று (ஜன.22) ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் 15 வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்கவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன்களை வழங்கிடவும், 2003 க்கு பின்னர் பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவும், ஆறு அம்ச கோரிக்கை நிறைவேற்ற கோரியும் கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர் இதில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.