மீண்டும் ரயில் சேவை இயக்க முதுநிலை கோட்ட வணிக மேலாளரிடம் மனு
சேலம்- அரக்கோணம் மெமு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், முதுநிலை கோட்ட வணிக மேலாளரிடம் மனு
சேலம்-அரக்கோணம் இடையே இயக்கப்பட்டு வந்த மொமு ரயில் சேவையை, ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர். கடந்த 20ம்தேதி முதல் இந்த ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மற்றும் சேலம் மாவட்ட பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என பலர் பாதிக்கப்பட் டுள்ளனர். நிறுத்தப்பட்ட ரயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும். மேலும், பொம்மிடி பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான கோவை விரைவு வண்டி, திருவனந்தபுரம் விரைவு வண்டி, பெங்களூரு விரைவு வண்டி மற்றும் நாகர்கோவில் விரைவு வண்டி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களை பொம்மிடியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். அரக்கோணம் ஜோலார்ப்பேட்டை இடையே இயக்கப்பட்டு வரும் ரயிலை, சேலம் வரை நீட்டிக்க வேண்டும் என பொம்மிடி இரயில் பயணாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொம்மிடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று ஜனவரி 22 சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை கோட்ட வணிக மேலாளர் பூபதி ராஜாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது சங்க தலைவர் ஆசாம்கான், ஜெபசிங், கார்த்திகேயன், முனிரத்தினம், சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.