உடையார்பாளையம் அரசு ஆண்கள் பள்ளியில் திருக்குறள் எழுதும் போட்டி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு புத்தகம் சான்று பரிசு
உடையார்பாளையம் அரசு ஆண்கள் பள்ளியில் திருக்குறள் எழுதும் போட்டி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு புத்தகம் சான்று பரிசுகள் வழங்கப்பட்டது.;
அரியலூர், ஜன.23- உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடையார் பாளையம் திருவள்ளுவர் ஞானமன்றம் சார்பில் 2056ஆவது திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்புவிழா நடைபெற்றது, நிகழ்வில் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சதாசிவம், பள்ளிமேலாண்மைக்குழுத்தலைவர் இரஞ்சித்குமார், திருவள்ளுவர் மன்ற செயலர் புலவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். திருவள்ளுவர் ஞானமன்ற தலைவர் பேராசிரியர் தஸ்தகீர் கலந்துகொண்டு உலகபொதுமறை திருக்குறள் என்ற தலைப்பில் திருக்குறள் ஓலைச்சுவடியிலிருந்து புத்தகமாக அச்சுக்கோத்து வடிவமைக்கப்பட்ட வரலாற்றை மிகத்தெளிவாக கூறி சிறப்புரையாற்றினார். திருக்குறள் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகம் சான்றிதழ் உடையார்பாளையம் திருவள்ளுவர் ஞான மன்றம் சார்பாக வழங்கப்பட்டது, மேலும் நிகழ்ச்சியில் தமிழாசிரியர் இராமலிங்கம், சிவநேசன், ஓவியர் காளமேகம் முத்தையன், மகாலிங்கம்,ரெங்கநாதன், சுகந்தி, மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியை தமிழாசிரியர் சிங்காரவேலன் ஒருங்கினைத்தார். முடிவில் ஆசிரியர் அருள் நன்றி கூறினார்.