மாவட்ட காவல்துறையை கண்டித்து கோர்ட் முன்பு வழக்கறிஞர் தொடர் உண்ணாவிரதம்

போலீசாரை கண்டித்து மயிலாடுதுறை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் உண்ணாவிரத போராட்டம்

Update: 2025-01-22 13:46 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கப்பாடி தாலுகா எடுத்துக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் சங்கமித்திரன். இவர் நாம் மக்கள் என்ற இயக்கத்தின் தலைவராக உள்ளார். மயிலாடுதுறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இதில் கூட்டு பாலியல் நடந்துள்ளதாகவும் இதுகுறித்து முறையான விசாரணையை காவல்துறை மேற்கொள்ளவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு பாலியல் குற்றவழக்குகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் சங்கமித்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர் சங்கமித்திரன் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். உரிய நீதி கிடைக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடர போவதாகவும், மயிலாடுதுறையில் நடந்து கூட்டுபாலியன் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும். விதிமுறை மீறி அரசு வக்கீல் கொடுத்ததை கண்டித்தும். பாலியல் குற்றவழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்ததற்கான என்மீது பொய்வழக்கு பதிவு செய்த எஸ்.பி.ஸ்டாலின், உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர், அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

Similar News