கோவை: முதியவர் தூக்கிட்டு தற்கொலை!

வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு முதியவர் தூக்கிட்டு தற்கொலை.

Update: 2025-01-22 13:57 GMT
கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள பாரதியார் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (64). இவர் சில நாட்களாக கடுமையான கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் வாழ்க்கையில் விரக்தியடைந்த செல்வராஜ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News