லாரி மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

Update: 2025-01-22 10:42 GMT
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபம் பாண்டே,29. இவர் சென்னையில் தங்கி, திருப்போரூர் அடுத்த தையூர் சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெறும் கட்டுமானப் பணியில், பொறியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் சுபம் பாண்டேயும், அவரது நண்பரான சுரேந்தர் குமார்,28, என்பவரும் வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில் 'பைக்'கில் சென்றனர். பைக்கை சுரேந்தர் குமார் ஓட்டிச் சென்றார். புதுப்பாக்கம் அருகே சென்ற போது, சாலையோரத்தில் நின்ற டாரஸ் லாரி மீது இவர்களது பைக் மோதியது.இதில், இருவரும் பலத்த காயமடைந்து மயங்கியுள்ளனர். அங்கிருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், சுபம் பாண்டே ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். சுரேந்தர் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சாலையோரம் லாரியை நிறுத்தி வைத்திருந்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஆறுமுகம்,49, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Similar News