நீச்சல் போட்டியை துவங்கி வைத்த சபாநாயகர்,கலெக்டர்
பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான நீச்சல் போட்டி
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் வளாகத்தில் இன்று (ஜனவரி 22) பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். இதில் மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.