ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கிராம,ஊராட்சி, வார்டு, பேரூர், நகர, வட்டார கமிட்டிகள் அமைப்பதற்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாக விரைவில் தனி அலுவலகம் திறக்கப்படும்- தேசிய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ உறுதி

Update: 2025-01-22 09:22 GMT
ராமநாதபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொள்கை காக்க அணி திரள்வோம், அடித்தளம் அமைக்க களம் காண்போம் என்ற அடிப்படையில் கிராம, ஊராட்சி, வார்டு, பேரூர், நகர, வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட பொருப்பாளரும் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர்.என். ராஜா ராம் பாண்டியன் தலைமையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான தெய்வேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா ஆகியோர்கள் முன்னிலை வகித்து பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பேசினார் மாநில மகளிர் அணி நிர்வாகி ராமலட்சுமி, தேசிய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னான்டோ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, ராமநாதபுரம் பாராளுமன்ற அமைப்பாளர் இதயத்துல்லா. மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு குழு உறுப்பினர் ஜோதி பாலன், திருப்புல்லாணி வட்டார காங்கிரஸ் தலைவர் சேது பாண்டியன் ராமநாதபுரம் நகர் காங்கிரஸ் தலைவர் கோபி, மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News