கடவுளே அஜித் என்று கோஷமிட்டு சென்ற பக்தர்கள்
பழனி கோவிலில் வரிசையில் சென்ற பாதயாத்திரை பக்தர்கள் கடவுளே அஜித் என்று கோஷமிட்டு சென்ற காட்சிகள் இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவிற்கு முன்னதாகவே பாதயாத்திரை பக்தர்கள் அதிகமாக வருகின்றனர். இந்நிலையில் பாதயாத்திரை வந்த இளைஞர்கள் சிலர் பழனி மலை கோவில் தரிசனத்திற்காக செல்லும் வரிசையில் சென்று கொண்டிருந்தபோது கடவுளே அஜித் என்று கோசமிட்டபடி சென்ற காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் அஜித்குமார் தன்னை கடவுளே அஜித் என்ற வார்த்தையை அழைக்காமல் ஏ கே என்றும் அஜித் குமார் என்றும் மட்டுமே அழைக்க வேண்டும் என அறிவித்து இருந்த நிலையில் பழனி கோவிலில் பாதயாத்திரை ஆக வந்த இளைஞர்கள் கடவுளை அஜித்தே என்று கோஷமிட்டவாறு சென்ற வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது.