பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழித்தடங்களை நீட்டிப்பு செய்த பகுதிகளில் பேருந்துகளை தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து துறையின் மூலம் பேருந்து வழித்தடங்களையும், புதிய பேருந்துகளையும் சிறப்பு பேருந்துகள், விழாக்காலச் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பேருந்து சேவைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலத்தூர் ஒன்றியத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழித்தடங்களை நீட்டிப்பு செய்த பகுதிகளில் பேருந்துகளை தொடங்கி வைத்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜெமீன் பேரையூர், தெரணி மற்றும் கொட்டரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக பேருந்து வழித்தடங்களை நீட்டிப்பு செய்து துவக்கி வைத்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் முழுமையாக பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறார்கள். குறிப்பாக பொதுமக்கள் அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து துறையின் மூலம் பேருந்து வழித்தடங்களையும், புதிய பேருந்துகளையும் சிறப்பு பேருந்துகள், விழாக்காலச் சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பேருந்து சேவைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது, பொதுமக்களின் கோரிக்கைகளை அவ்வப்போது கேட்டறிந்து, அவற்றை உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், ஆலத்தூர் ஒன்றியத்திற்குபட்ட பகுதிகளில் பல இடங்களில் வழித்தட நீட்டிப்பு வேண்டும் என்று மக்கள் விடுத்த கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பெரம்பலூர் - குரும்பாபாளையம் நகரப்பேருந்து, கொட்டரை, ஆதனூர் வரை நீட்டிப்பு செய்தும், பெரம்பலூர் – கொளக்காநத்தம் – அரியலூர் செல்லும் புறநகர் பேருந்து ஜெமீன் பேரையூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம் வழியாக நீட்டிப்பு செய்தும், அரியலூர் – கொளக்காநத்தம் நகரப் பேருந்து காலை வழியாக தெரணி வரை நீட்டிப்பு செய்தும், திருச்சி கூடலூர் புறநகர் பேருந்து திம்மூர் கொளக்காநத்தம் வரை நீட்டிப்பு செய்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வினை எளிதாக எதிர்கொள்ளப் பயன்படும் வகையில், கல்வியில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு, தனது சொந்த செலவில் தயாரிக்கப்பட்ட ”தேர்வை வெல்வோம்” என்ற வழிகாட்டி வினா விடை கையேடுகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இந்த வழிகாட்டி கையேட்டினை இலவசமாக மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கி வருகின்றார். பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 10ஆம் வகுப்பு பயிலும் 4,972 மாணவ மாணவிகளுக்கும், 11 ஆம் வகுப்பு பயிலும் 3,981 மாணவ மாணவிகளுக்கும், 12ஆம் வகுப்பு பயிலும் 4,129 மாணவ மாணவிகளுக்கும் என மொத்தம் 13,082 மாணவ மாணவிகளுக்கு இந்த கையேடுகள் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் பெருந்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, போக்குவரத்துத்துறை திருச்சி மண்டல பொதுமேலாளர் முத்துகிருஷ்ணன், கோட்ட மேலாளர் புகழேந்தி ராஜ் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.