திருமருகல் ஒன்றிய பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால்

பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு

Update: 2025-01-22 14:30 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில், அண்மையில் பருவம் தவறி பெய்த மழையால் பில்லாளி, அனவாசநல்லூர், தாதன்கட்டளை, திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, விற்குடி, வாழ்குடி, திருமருகல், திருப்புகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த சம்பா சாகுபடி நெற்பயிர்களை, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது ஒன்றிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த சாகுபடி பரப்புகளையும் வருவாய்த் துறையினருடன் இணைந்து கணக்கீடு செய்து அரசுக்கு அனுப்பப்படும். மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு கிடைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது , வேளாண்மை அலுவலர் சாகித்யா, வேளாண்மை உதவி அலுவலர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.

Similar News