அரசு கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்க முதல்வரிடம் எம்பி கோரிக்கை

சிவகங்கையில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, பெண் காவலர் பயிற்சிப் பள்ளி தொடங்க வேண்டுமென கார்த்தி சிதம்பரம் எம்பி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.;

Update: 2025-01-23 04:02 GMT
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் கடந்த 2022 ஜூன் 8-ம் தேதி சமத்துவபுர திறப்பு விழாவில் விடுதலைப் போராட்ட வீரர் வேலுநாச்சியார் பெயரில் பெண் காவலர் பயிற்சிப் பள்ளி தொடங்க வேண்டுமென கார்த்தி சிதம்பரம் எம்.பி. கோரிக்கை வைத்தார். அதே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அமைப்பதாக உறுதியளித்தார். அதே ஆண்டு இதுதொடர்பாக டிஜிபியிடம் உள்துறைச் செயலர் மூலம் கருத்துரு கேட்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஆண்டு செப்.9-ம் தேதி உள்துறைச் செயலருக்கு கார்த்தி சிதம்பரம் நினைவூட்டல் கடிதம் அனுப்பினார். அதற்கு காவலர் பயிற்சிப் பள்ளி தொடங்க அவசியம் இல்லை என்று உள்துறை செயலர் பதிலளித்தார். இதையடுத்து நேற்று(ஜன.22) சிவகங்கை வந்த மு.க.ஸ்டாலினிடம் பெண் காவலர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்க வேண்டுமென கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீண்டும் கோரிக்கை வைத்தார். மேலும் சிவகங்கையில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

Similar News