விடுதலைப் போராட்ட வீரர் வாளுக்குவேலி சிலை திறப்பு
சிவகங்கையில் ரூ.1.07 கோடியில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், வாளுக்குவேலி சிலையைத் திறந்து வைத்தார்.;
சிவகங்கை அருகே நகரம்பட்டியில் விடுதலைப் போராட்ட வீரர் வாளுக்குவேலிக்கு ரூ.50 லட்சத்தில் சிலை அமைக்கப் பட்டது. இச்சிலையை சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசுக் கல்லூரி மைதானத்தில் நடை பெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத் தார். தொடர்ந்து சிவகங்கை வேலுநாச்சியார் மணிமண்டபம் அருகே ரூ.1.07 கோடியில் அமையும் விடுதலைப் போராட்ட வீரர்கள் மருதுசகோதரர்கள் சிலைகளுக்கும், காரைக்குடியில் ரூ.50 லட்சத்தில் அமையும் வீறுகவியரசர் முடியரசன் சிலைக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித், திருப்புவனம் பேரூ ராட்சித் தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.