தேசிய வாக்காளர் தினம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
சிவகங்கை மாவட்டம், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.;
சிவகங்கை மாவட்டம், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. அவ்வாறு, நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வருகின்ற 25.01.2025 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. மேலும், சிறப்பாகப் பணிபுரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO), வாக்குச்சாவடி மேற்பார்வை அலுவலர்கள் ஆகியோர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு தொடர்ச்சியாக மனுக்கள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதோர் தங்கள் இருப்பிடங்களிலிருந்து Voter Helpline என்ற செயலியின் வாயிலாகவோ அல்லது https://www.nvsp.in, https://www.voters.eci.gov.in என்ற வலைத்தளங்கள் மூலமாகவோ விண்ணப்பித்து, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.