இரயில் நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த வடமாநில பயணி கைது

மானாமதுரை இரயில் நிலையத்தில் போதையில் திரிந்த பீகாரைச் சேர்ந்த பயணியை ரயில்வே போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.;

Update: 2025-01-24 06:57 GMT
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை இரயில்வே காவல் சார்பு ஆய்வாளர் தனுஷ்கோடி தலைமையிலான போலீசார், நகரில் உள்ள இரயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் ரோந்து சென்றனர். அப்போது, டிக்கெட் கவுன்டர் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் போதையில் நடமாடிய வடமாநில பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனையிட்டதில் 20 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவர் பீகார் மாநிலம், சாலியா மாவட்டம், தீப்தி கிராமத்தை சேர்ந்த ராம்நாத் பூகியன் மகன் தினநாத் பூகியன் என்பதும், இரயிலில் கஞ்சா புகைத்துக்கொண்டே பயணித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News