வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி;

Update: 2025-01-24 15:19 GMT
ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு வாலரை கேட் அருகேஉள்ள மைதானத்தில் இருந்து தொடங்கி வேலூர் ரோடு நான்கு ரத வீதிகள் வழியாக சென்ற பேரணி பழைய பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது பேரணியை திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பொறுப்பு பூங்குழலி நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய ஆய்வாளர் தீபா வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாமப் பிரியாஆகியோர் கலந்து கொண்டனர் பேரணியில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி சென்றவர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை வேண்டிய படி சென்றனர்.பேரணியை துவக்கி வைத்து பேசிய திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் கூறியதாவது. முப்பதாயிரம் ரூபாய் போட்டு வாங்கும் செல்போனுக்கு டெம்பர் கார்டு கவர் ஆகியவற்றை போட்டு பாதுகாக்கிறோம் ஆனால் விலைமதிப்பற்ற உயிரை பாதுகாக்க தலைக்கவசம் அணிய மறுக்கிறோம் நான் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்கிறேன் நான் காரில் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணியாமலோ தலைக்கவசம் அணியாமலோ செல்வதை யாராவது நிரூபித்தால்உன்னுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்க தயாராக இருக்கிறேன் என கூறினார்

Similar News