நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்;

Update: 2025-01-24 15:24 GMT
சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருச்செங்கோடு உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிஅருகில் இருந்து துவங்கிய பேரணியை நெடுஞ்சாலை உதவி கூட்டம் பொறியாளர் நடராஜன் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் தீபா ஆகியோர் கொடிய சீட்டு துவக்கி வைத்தனர் பேரணியில் உதவி பொறியாளர்கள் திருச்செங்கோடு மோகன்ராஜ் பள்ளிபாளையம் பிரதீப் பாய் உள்ளிட்ட50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.காமராஜர் சிலை பழைய பேருந்து நிலையம் நான்கு ரத வீதிகள் பள்ளிபாளையம் ரோடு தெப்பக்குளம் வழியாக மீண்டும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே பேரணி நிறைவடைந்தது பேரணியில் சென்றவர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தி சென்றனர். மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

Similar News