காங்கேயம் அருகே கிராம சபை கூட்டத்தில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
காங்கேயம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பாடி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தனர்;
காங்கேயம் ஒன்றியத்திற்குட்பட்ட. ஆலம்பாடி ஊராட்சி சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள், கருப்பு கொடி, பதாகைகள் ஏந்தி விவசாயிகள், கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர், தெரு நாய்கள் கடித்து பலியான ஆடுகளுக்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி கண்டனத்தை பதிவு செய்தனர், ஏற்கனவே தெரு நாய்கள் பிரச்சனை தொடர்பாக மாவட்டத்திலுள்ள 24 ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதுஊராட்சி நிர்வாகம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும்,45 நாட்களுக்குள் இழப்பீடு பெற்று தரப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் பேரில் வழங்கப்பட்ட கடித நகலையும் வழங்கி விவசாயிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியதால் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பரபரப்பு காணப்பட்டது. இந்த ஆலம்பாடிகிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கிராம மக்கள் கருப்பு கொடியுடன் சென்று ஆலம்பாடி ஊராட்சி நிர்வாகமே தெருநாய்கள் வேட்டைக்கு இரையாகும் ஆடுகளின் உரிமையாளர்களுக்கு காலம் தாழ்த்தாமல் இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற வாசகங்கள் இடம் பெற்ற பதாகைகளுடன் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர், ஊராட்சி செயலாளரிடம் ஆடுகளை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மனுக்களை வழங்கினர். இதேபோன்று மாவட்டத்தில் காங்கேயம் ஒன்றியம் வெள்ளகோவில் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அப்பகுதி விவசாயிகள் கருப்புக் கொடியுடன் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு வருட காலமாக தோட்டங்களில் உள்ள பட்டிகளில் அடைக்கப்பட்டு இருக்கின்ற ஆடுகள் ,தோட்டங்களில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள் தெரு நாய்கள் கடித்து 500க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளது,இதனால் வாழ்வாதாரம் இழந்து விவசாயிகள் தவிப்பதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுக்கள் வழங்கியும் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெறக்கூடிய கிராம சபை கூட்டத்தில் கருப்பு கொடி ஏந்தி தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளதாக ஆலாம்பாடி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் ஒவ்வொரு கிராம சபை கூட்டங்களிலும் ஏதாவது ஒரு ஊராட்சியில் மட்டுமே இது போல் பிரச்சனைகள் குறித்து விவாதம் நடைபெறும் ஆனால் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் ஒட்டுமொத்த காங்கேயம் தாலுக்கா பகுதியில் உள்ள அனைத்து கிராம சபை கூட்டத்திலும் பிரச்சினையாக நாய்கள் ஆடுகளைத் தாக்கும் சம்பவம் இருந்ததும் இதனால் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தியும் கால்நடைகளை கிராம சபை கூட்டத்திற்கு தொலைத்து வந்ததும் மேலும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது