நத்தக்காடையூரில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

காங்கேயம் அருகே நத்தக்காடையூரில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்;

Update: 2025-01-27 08:31 GMT
நத்தக்காடையூர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு தை மாத மூல நட் சத்திர சிறப்பு அபிஷேக பூஜை  நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு வேள்வியுடன் ஹோம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு புதிய பட்டாடை உடுத்தப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சம்பங்கி, கதம்ப பூக்கள், துளசி. வடை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. விழா நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் வார வழிபாட்டு குழுவினர், பக்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Similar News