அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு புதிய கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை

அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு புதிய கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை;

Update: 2025-01-27 09:23 GMT
திருச்செங்கோடு நகரில் புதிய பஸ் நிலையத்திற்கு எதிரில் மிகவும் பழமையான அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது இதில் தற்போது 2200 மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 80 ஆசிரியைகள் உள்ளனர். மாணவிகளுக்கு போதிய வகுப்பறை இல்லாத காரணத்தினால் 18 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுகள் கட்டடம்கட்ட திட்டமிடப்பட்டு நபார்டு திட்டத்தில் ரூபாய் 4.86 கோடியில் கட்டப்பட உள்ளது. கட்டடத்தின் தரை தளம் முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் ஆகியவற்றின் மொத்த பரப்பளவு 1388.10 சதுர மீட்டர் ஆகும். அறிவியல் ஆய்வகத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தின் பரப்பளவு 322.80 சதுர மீட்டர் ஆகும். தரைத்தளத்தில் ஆறு வகுப்பறைகளும் முதல் தளத்தில் ஆறு வகுப்பறைகளும், இரண்டாம் தளத்தில் ஆறு வகுப்பறைகளும் கட்டப்பட உள்ளன. அறிவியல் ஆய்வகம் தரைதளத்திலும் முதல் தளத்திலும் அமைய உள்ளது. புதிய வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகத்திற்கான கட்டிடங்கள் கட்டும் பணிபூமி பூஜை செய்து துவங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர் மாரிமுத்து அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், மண்டல நகரமைப்பு திட்ட குழு உறுப்பினர் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு,நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, நகர் மன்ற துணைத் தலைவர் நகர திமுக செயலாளர் கார்த்திகேயன்ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். பள்ளி மாணவிகள் பயன்பெறும் வகையில் கட்டப்பட உள்ள இந்த கட்டிடம் தரமானதாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட காலத்தில் பணியை முடித்து மாணவிகள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தினர். இந்த விழாவில் கொமதேக மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் தலைமை நிலைய செயலாளர் லாவண்யா ரவி,கொள்கை பரப்புச் செயலாளர் நந்தகுமார் நகர செயலாளர் சேன்யோகுமார் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் அசோக் குமார், கலையரசி சதீஷ்குமார், பள்ளி ஆசிரியைகள் மாணவிகள் எனபலரும் கலந்து கொண்டனர்.

Similar News