தூய்மை திட்ட பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு
தூய்மை திட்ட பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு;

திருச்செங்கோடு நகராட்சி கால்நடை மருத்துவமனை எதிரில் நந்தவன தெரு பகுதி வகையில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்புகள் ஏற்பட்டு தொல்லையாக இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் அந்த பகுதியில் உள்ள கால்வாய்கள் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.இதனை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நேரில் ஆய்வு செய்தார். அப்போது பழைய முறையில் கால்வாய் அமைக்கப் பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேற வாட்டம் இல்லாததால் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் உறிஞ்சு வாகனங்கள் மூலமாக தான் தண்ணீர் வெளியேற்றப்படுவதாகவும் உடனடியாக புதிய வடிகால் அமைத்து தரவேண்டும் என பகுதி பொதுமக்கள்கோரிக்கை வைத்தனர் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டுதண்ணீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்குநகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு உறுதி அளித்தார்.இதே போல் சூரியம்பாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்பணியை நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரை கேட்டுக்கொண்டார் இதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் கோவில் வீதியில் ஒருபுறம் வடிகால் முழுமையாகமண்மூடி கிடக்கும் நிலையைக் கண்டு உடனடியாக அதனை அகற்றி வடிகால் பயன்படுத்தும் வகையில் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துப்புரவு அலுவலரிடம் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அறிவுறுத்தினார் உடனடியாக அங்கு நகராட்சி பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு கால்வாய்களில் உள்ள சேறு சகதிகள் அகற்றப்பட்டு அடைப்புகள் முழுமையாக நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது ஆய்வின்போது துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் நகர்மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி உலகநாதன் அண்ணாமலை ரவிக்குமார் திவ்யா வெங்கடேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.