வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது ஜேசிபி மோதி கணவன் மனைவி படுகாயம்

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது ஜேசிபி வாகனம் மோதி கணவன் மனைவி படுகாயம் போலீசார் விசாரணை;

Update: 2025-01-28 11:51 GMT
திருப்பத்தூரில் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது போக்குவரத்து விதிமுறைகளை மீறி சாலையில் எதிர் திசையில் வந்த கிரேன் இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கணவன் மனைவி, கிரேன் ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த பழனி என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளையுடன், இருசக்கர வாகனத்தில், வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்த போது, வளையாம்பட்டு, பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் வந்து கொண்டிருந்த போது, அதே சாலையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்போன் பேசிக்கொண்டு, சாலையின் எதிர்திசையில் கிரேன் இயந்திரத்தை ஓட்டி வந்த கிரேன் ஓட்டுநர் சாலையோரம் வந்து கொண்டிருந்த பழனியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், பழனி படுகாயடைந்துள்ளார், உடனடியாக அவரை மீட்ட அங்கிருந்த பொதுமக்கள், அவரை சிகிச்சையிற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர், மேலும் பழனியின் மனைவி மற்றும் குழந்தை காயமின்றி உயிர்தப்பிய நிலையில், இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் கிரேன் இயந்திர ஓட்டுநர் ஜெகனிடம் விசாரணை மேற்க்கொண்ட போது, அங்கு வந்த பழனியின் உறவினர்கள் ஜெகனை சரமாரியாக தாக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது, அதனை தொடர்ந்து இவ்விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..

Similar News