மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

மூலனூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்;

Update: 2025-01-29 01:18 GMT
மூலனூர் வட்டார வள மைய அலுவலகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ராஜாமணி, ஜெயமீனா, வசுமதி மற்றும் தலைமை ஆசிரியர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அடையாள அட்டை நலவாரியம் பதிவு, பயணச்சலுகை அட்டை ஆகியவற்றிற்கான விளக்கங்கள் தரப்பட்டன.

Similar News