ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் கைது
ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் கைது ஆம்பூர் போலீசார் அதிரடி நடவடிக்கை;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காலனி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் கைது திருடப்பட்ட நகையை வாணியம்பாடி பகுதியில் நகைக்கடைக்கு விற்பனைக்காக கொண்டு சென்று மீண்டும் கொண்டு வந்து குப்பையில் பதுக்கி வைத்ததாக பரபரப்பு வாக்குமூலம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்சானாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் இவர் ஆம்பூரில் செயல்பட்டு வரும் தனியார் காலனி தொழிற்சாலையில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்துள்ளார் அதேபோல் அவரது மனைவி வரலட்சுமியும் துத்திப்பட்டு பகுதியிலுள்ள தனியார் காலனி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர் இந்த நிலையில் கடந்த 24 ந்தேதி வழக்கம்போல் கணவன் மனைவி இருவரும் காலனி தொழிற்சாலைகளுக்கு பணிக்கு சென்று விட்ட நிலையில் பிள்ளைகள் நான்கு பேரும் பள்ளி மற்றும் பல்வேறு பணிகளுக்கு வெளியில் சென்று உள்ளனர். காலை 6 மணி வேலைக்கு சென்ற வெற்றிவேல் பணி முடிந்து 2 மணிக்கு வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார் அப்போது பீரோவில் தனது மூத்த மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்த 8 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளது குறித்து உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்று தடயங்கள் சேகரிக்கப்பட்டு அருகில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் சம்பவத்தன்று அங்கிருந்த பொதுமக்களிடம் திருடு போனது குறித்து விசாரணை மேற்கொண்ட போது கூட்டத்தோடு கூட்டமாக இருந்து வேடிக்கை பார்த்து நாங்கள் வெளியில் சென்று இருந்ததாக கூறிய இரண்டு இளைஞர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வரவே அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் காலனி தொழிற்சாலையில் எலக்ட்ரிஷினாக பணிபுரியும் வெற்றிவேல் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடியது மேல்சானாங்குப்பம், அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சுரேந்தர் (19) என்பது தெரியவந்தது மேலும் இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திருடப்பட்ட நகைகளை வாணியம்பாடி பகுதியில் உள்ள ஒரு நகை கடைக்கு விற்பனைக்காக கொண்டு சென்று அங்கு நகையை வாங்காததால் மீண்டும் கிராமத்திற்கு கொண்டு வந்து குப்பையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து மூன்று சவரன் நகைகளை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இவர் ஏற்கனவே திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுள்ளாரா என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு ஆம்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர் ஆம்பூர் அருகே காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்போது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது