ஆம்பூர் அருகே பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பதை தொடர்ந்து, வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை டிராக்டர் மூலம் நேரடியாக பாலாற்றில் திறந்துவிடும் நபர்கள்..

ஆம்பூர் அருகே பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பதை தொடர்ந்து, வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை டிராக்டர் மூலம் நேரடியாக பாலாற்றில் திறந்துவிடும் நபர்கள்..;

Update: 2025-01-30 04:59 GMT
  • whatsapp icon
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பதை தொடர்ந்து, வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை டிராக்டர் மூலம் நேரடியாக பாலாற்றில் திறந்துவிடும் நபர்கள்.. சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பு.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் சில தோல் தொழிற்சாலைகள் கனமழையை பயன்படுத்தி பாலாற்றில் தோல் கழிவுநீரை திறந்து விடுவதால், மாராப்பட்டு பகுதியில் பாலாறு துர்நாற்றத்துடன் நுரைப்பொங்கி ஓடுவதால், பாலாறு படுக்கையில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குடிக்க கூடா முடியாத அளவிற்கு, இருப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி, பாலாற்றில் தோல் கழிவுநீரை திறந்துவிடக்கூடாது என விவசாயிகள், அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வரும் நிலையில், அதிகாரிகளும் பாலாற்றில் தோல் கழிவுநீரை தடுப்பது குறித்து மெத்தனப்போக்காக செயல்படும் நிலையில், இன்று, வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புபகுதியில் சேகரிக்கப்படும், கழிவுநீரை சிலர் டிராக்டர் மூலம் கொண்டு வந்து மாராப்பட்டு பாலாற்றில் நேரடியாக திறந்து விடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மேலும் இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Similar News