திருப்பத்தூரில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ப்பு நிகழ்ச்சி வட்டாட்சியர் நவநீதம் தலைமையில் நடைபெற்றது;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ப்பு நிகழ்ச்சி வட்டாட்சியர் நவநீதம் தலைமையில் நடைபெற்றது தியாகிகள் தினத்தை ஒட்டி ஜனவரி 30 தேதி தீண்டாமை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் நவநீதம் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார் இதில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் என இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழிகள் ஏற்று கொண்டனர். தீண்டாமை ஒழிக்க பட்டது என்பதை அறிவேன் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு சமூக வேற்றுமையை காண்பிக்க மாட்டேன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி சமய வேறுபாடு அற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவேன் நேர்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றுவேன் எனவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது