நாட்றம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்!
நாட்றம்பள்ளி அருகே ஆறு மாத காலங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்*;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஆறு மாத காலங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொண்டகிந்தணபள்ளி ஊராட்சிக்குட்பட்ட மல்லரபட்டி பகுதியில் சுமார் 30 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு இருந்த ஆழ்துளை கிணறு ஒரு ஆண்டுக்கு முன்பு பழுதானதாக கூறப்படுகிறது இதன் காரணமாக அப்பகுதியில் குடிநீர் சரிவர வழங்காமல் சுமார் ஆறு மாத காலமாக பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக ஊராட்சி நிர்வாகத்தினரிடம் அப்பகுதி மக்கள் பலமுறை குடிநீர் வழங்க மனு அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது இதனை கண்டும் காணாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் பச்சூரில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுனர். இது குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி காவல்துறையினர் மற்றும் தாசில்தார் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க .நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.