கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம், மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் நடைபெறவுள்ளது.;

Update: 2025-01-30 07:57 GMT
சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 01.02.2025 முதல் 14.02.2025 வரை இருவாரக் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம், மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் நடைபெறவுள்ளது. “கிராம மக்களின் பொருளாதார பாதிப்பை தடுக்க, ஆண்டுதோறும் இரு வார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்” நடைபெறும். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 01.02.2025 முதல் 14.02.2025 வரை இருவாரக் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடத்திட திட்டமிடப்பட்டு, 2,40,000 கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் கால்நடை பராமரிப்புத் துறையினரால் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. கோழிக்கழிச்சல் நோய் (வைரஸ் நச்சுயிர்) அனைத்து வயது கோழிகளையும் தாக்கும் தன்மை உடையது. இந்நோயானது, 8 வாரத்திற்கு மேற்பட்ட கோழிக்குஞ்சுகளுக்கு அதிகம் பாதிப்பினை ஏற்படுத்தும். மேலும், கோழிக்கழிச்சல் நோயின் அறிகுறிகளாக கோழிகள் உடல்                   நலமின்றி உறங்கிய படி இருக்கும். தீவனம், தண்ணீர் எடுத்துக்கொள்ளாது. கோழி எச்சம் வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் அதிக துர்நாற்றத்துடன் காணப்படும்.  கோழிகள் வெயில் காலங்களில் மிகவும் பாதிக்கப்படுவதால், ஆண்டுதோறும் வெயில் காலம் தொடங்கும் பருவமான பிப்ரவரி மாதத்தில் இருவாரக் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். எனவே, விவசாயப் பெருமக்கள் மற்றும் கோழி வளர்ப்போர் அனைவரும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில், தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News