திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது

திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது;

Update: 2025-01-30 12:05 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளிகளில் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது திருப்பத்தூர் அடுத்த பஞ்சனம்பட்டியில் செயல்பட்டு வரும் செவன்த்- டே அட்வண்டிஸ்ட் தனியார் பள்ளியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்று வழங்கினர் இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் கொம்பையா ஆபிரகாம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக திருப்பத்தூர் தீயணைப்புத்துறை காவல் ஆய்வாளர் தசரதன், மருத்துவத்துறை பிரகாஷ், போதகர் விக்ரம் சார்லஸ் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்கள் வருகையின் போது பள்ளி மாணவ மாணவிகளின் கொடி அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் திருப்பத்தூர் தீயணைப்பு துறை காவல் ஆய்வாளர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பேசுகையில்: மாணவ மாணவச் செல்வங்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு விளையாட்டு துறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்களின் வழிகாட்டுதலும், ஆசிரியர்களின் ஊக்கத்துடனும் சமுதாயத்தில் சிறந்து விளங்க வேண்டும். குழந்தை பருவத்தில் இருந்தே விடாமுயற்சியோடு ஒவ்வொரு போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியை அடைய வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை கனிவோடு கவனித்துக் கொள்வதோடு தங்களின் வீடு மற்றும் அருகாமையில் தூய்மையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் விழிப்போடு இருக்க வேண்டும் என்று கூறினார். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கபடி, சதுரங்கம், சிலம்பம்,அணிவகுப்பு பயிற்சி, என ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை லட்சுமணன், பள்ளியின் பள்ளியின் இருபாலர் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஓட்டுனர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Similar News