மனிதநேய வார விழா - மாணாக்கர்களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள்

சிவகங்கை மாவட்டம், மனிதநேய வார விழாவினை முன்னிட்டு, பள்ளி மாணாக்கர்களிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற 81 மாணாக்கர்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார்.;

Update: 2025-01-30 14:49 GMT
மனிதநேய  வார  விழா - மாணாக்கர்களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள்
  • whatsapp icon
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (30.01.2025) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழா நிகழ்ச்சியில் மனிதநேய வார விழாவினை முன்னிட்டு, பள்ளி மாணாக்கர்களிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணாக்கர்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார் பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் மனித நேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தில் மனித நேய நாளாகவும் மற்றும் தீண்டாமை ஒழிப்பு தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் எவ்வித பாகுபாடுன்றி ஒற்றுமையுடனும் மனிதநேயத்துடனும் வாழ்ந்திடும் பொருட்டு, மனிதநேய வார நிறைவு விழா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மனிதநேயத்தை எல்லோரும் சரியாக கடைப்பிடித்தால், சமுதாயத்தில் பாகுபாடு என்ற நிலை முற்றிலும் ஒழிக்கப்படும். அதை ஒவ்வொருவரும் உணர்ந்து, மனிதநேயத்தை உறுதிப்படுத்தும் விதமாக தீண்டாமையை அகற்றி நல்லிணக்கத்துடன் வாழவேண்டும். அதேபோல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கும் முன்வர வேண்டும். அப்பொழுதுதான் மனிதநேயம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பயன்பெறும். எனவே எவ்விதப்பாகுபாடின்றியும், எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் உதவி செய்யும் எண்ணம்தான் மனித நேயத்திற்கு அடிப்படையாக திகழும். அதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்தும் விதமாக செயல்பட்டு, ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்திடல் வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கப்பெறவேண்டும் என்ற அடிப்படையில், அரசின் சார்பில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, அத்திட்டங்களை பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் முறையாக அறிந்து கொண்டு, அத்திட்டங்கள் மூலம் முழுமையாக பயன்பெற்று, வாழ்வில் சிறந்து விளங்கிடுவதற்கு அடிப்படையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சியில், மனிதநேயம் குறித்து பள்ளி மாணவ மாணவியர்கள் தங்களின் பேச்சுத்திறன் வாயிலாக விரிவாகவும், சிறப்பாகவும் இங்கு எடுத்துரைத்தனர். இதனை கருத்தில் கொண்டு, எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் சமம் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் மனித நேயத்துடன் செயல்பட்டு, பிறருக்கு உதவிடும் மனப்பான்மையினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார். இவ்விழாவில், பள்ளிகள் அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, நாட்டியப்போட்டி, அழகு கையெழுத்துப் போட்டி ஆகிய போட்டிகளில் பங்கேற்று முதல் 3 இடங்களைப் பெற்ற அதிகரம் மற்றும் உஞ்சனை அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, அதிகரம் மற்றும் உஞ்சனை அரசு ஆதிதிராவிடர் துவக்கப்பள்ளி, மல்லல் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 81 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலை கதிரவன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) கார்த்திகேயன், மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்புக் கண்காணிப்புக்குழு, ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் தூய்மைப்பணிபுரிவோர் மாவட்ட கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் பொன்னுச்சாமி, பூமிநாதன், செல்வகுமார், பாலாஜி, புலிக்குட்டி, பிச்சை, மலைச்சாமி, மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சேவுகன், இணை பேராசிரியர் (பொருளியல்) சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரி பரமசிவன், தலைமையாசிரியர் உஞ்சனை அரசு (ஆதிந) உயர்நிலைப்பள்ளி பொன்மனச்செம்மல், தனி வட்டாட்சியர்கள் (ஆதிந) கந்தசாமி (தேவகோட்டை), லெனின் (சிவகங்கை), மற்றும் விடுதிகாப்பாளர்கள், மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News