டி.என்.பாளையம் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
டி.என்.பாளையம் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை;
டி.என்.பாளையம் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள ஏரங்காட்டூர் புதுகாலனியை சேர்ந்தவர் குமார் (வயது 39). அவருடைய மகள் கீர்த்தனா. இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஏரங்காட்டூர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கீர்த்தனா கடந்த 29-ந்தேதி மாலை அதே பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் கீர்த்தனா தனியாக இருந்தார். மனமுடைந்து காணப்பட்ட அவர் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீர்த்தனா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். கீர்த்தனாவுக்கு திருமணம் நடந்து 9 மாதங்களே ஆவதால் கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் மேல் விசாரணை நடத்தி வருகிறார்