வாணியம்பாடி அருகேதேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள இரும்பு தடுப்பு வேலியில் மோதி விபத்து
வாணியம்பாடி அருகேதேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள இரும்பு தடுப்பு வேலியில் மோதி விபத்து;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேதேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள இரும்பு தடுப்பு வேலியில் மோதி விபத்து திருப்பத்தூர் பகுதி சேர்ந்த மருத்துவர் ஜெயசீலன் (26) இவர் ஓசூர் பகுதியில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வந்தவாசியில் உள்ள அவரது நண்பர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் இன்று காலை திருப்பத்தூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார் அப்பொழுது திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியையொட்டிய தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் உள்ள உயர் மின்சார கம்பத்தின் மீது மோதியதில் காரின் முன்பக்க டயர் கழண்டு விழுந்தது பின்னர் சாலை நடுவே உள்ள இரும்பு தடுப்பு வேலியில் மோதி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மருத்துவர் ஜெயசீலன் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் வாணியம்பாடி நகர போலீசார் கிரேன் உதவியுடன் சாலையில் இருந்த காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் வாணியம்பாடி நகர போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.