ஜோலார்பேட்டை அருகே செல்போன் திருடன் இருவர் கைது
ஜோலார்பேட்டை அருகே செல்போன் இருவர் கைது 5 செல்போன் பறிமுதல்;
திருப்பத்தூர் மாவட்டம் தொடர் செல் போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது! இருசக்கர வாகனம் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல்! ஜோலார்பேட்டை போலீசார் நடவடிக்கை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புல்லானேரி சுடுகாடு அருகே மணி என்பவர் வீட்டிற்கு செல்லும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் மணி வைத்திருந்த செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த 2மர்ம நபர்கள் திருடிச் சென்றனர் . பின்னர் இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்டு போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே போலிசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியதன் காரணமாக காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியை சார்ந்த கோபி மகன் சந்தோஷ் (20), சுபமங்கலம் ஜான்சன் மகன் விஜய் (21),இருவரும் கடந்த 25ஆம் தேதி செல்போன் பறிப்பில் ஈடுபட்டது நாங்கள்தான் என இருவரும் ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 5க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்...