நாட்றம்பள்ளி அருகே அனுமதி இல்லாமல் வேலி கற்கள் ஏற்றி வந்த நபர் கைது! டிராக்டர் பறிமுதல்*

நாட்றம்பள்ளி அருகே அனுமதி இல்லாமல் வேலி கற்கள் ஏற்றி வந்த நபர் கைது! டிராக்டர் பறிமுதல்*;

Update: 2025-02-01 09:10 GMT
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே அனுமதி இல்லாமல் வேலி கற்கள் ஏற்றி வந்த நபர் கைது! டிராக்டர் பறிமுதல்* கனிமவள தனி வருவாய் ஆய்வாளர் பெருமாள் சண்முகத்திற்கு அனுமதி இன்றி வேலி கற்கள் ஏற்றி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார் அப்போது அந்த வழியாக டிராகடரில் வேலி கற்களை ஏற்றி நபரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அனுமதி இன்றி வேலி கற்களை ஏற்றி வந்ததும் மேலும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த கோவிந்தப்பா மகன் சுரேஷ் (28) என்பதும் தெரியவந்தது. இதன் காரணமாக கனிமவள தனி வருவாய் ஆய்வாளர் பெருமாள் சண்முகம் சுரேஷ் மற்றும் வேலி கற்கள் ஏற்றி வந்த டிராக்டரையும் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனால் நாட்றம்பள்ளி போலிசார் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் மேலும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்…

Similar News